தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேம் வாஸ் ஓவர்...மம்தாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மோடி! - பிரதமர் மோடி

டெல்லி: பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த நிலையில், அவரின் ஸ்கூட்டர் நந்திகிராமில் வீழ்ச்சியை சந்திக்கும் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Mar 7, 2021, 6:15 PM IST

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் வார்த்தை போர் வெடித்துள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை தோல்வி அடைய வைக்கும் வகையில் பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இதற்கிடையே, பாரம்பரிய தொகுதியான பவானிப்பூருக்கு பதிலாக நந்திகிராமில் போட்டியிடவுள்ளதாக மம்தா அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, மம்தாவின் ஸ்கூட்டர் நந்திகிராமில் வீழ்ச்சியை சந்திக்கும் என விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "உங்களின் (மம்தா) ஸ்கூட்டர் பவானிப்பூருக்கு செல்வதற்கு பதில் நந்திகிராமின் பக்கம் திரும்பியுள்ளது. அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும், யாரும் காயப்பட கூடாது என நினைப்பவன் நான். இருப்பினும், ஸ்கூட்டர் நந்திகிராமில் கீழே விழும் என எழுதிவைக்கப்பட்டிருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்?" என்றார்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக தலைமைச் செயலகத்திலிருந்து வீட்டிற்கு மம்தா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றதை விமர்சிக்கும் விதமாக மோடி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

"மேற்கு வங்க மக்கள் உங்களை அக்காவாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், நீங்களோ உங்களின் மருமகனுக்கு அத்தையாக மட்டுமே இருக்க விரும்புகிறீர்கள், அதற்கு காரணம் என்ன? மேற்கு வங்க மக்கள் இந்த கேள்வியை மட்டுமே எழுப்பி வருகிறார்கள்" என மோடி தெரிவித்தார். 'விளையாடுவோம்' என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பாடலை விமர்சித்த மோடி, உங்களின் விளையாட்டு முடிந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details