தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலில் காயம் ஏற்பட்ட போதும் படப்பிடிப்பில் தொடர்ந்து ஓடிய அமீர்கான்... - படப்பிடிப்பில் தொடர்ந்து ஓடிய அமீர்கான்

அமீர்கான் நடித்து வெளிவர இருக்கும் லால் சிங் சத்தா படப்பிடிப்பின் போது அமீர்கானின் காலில் காயம் ஏற்பட்டது.

படப்பிடிப்பில் தொடர்ந்து ஓடிய அமீர்கான் - காலில் ஏற்பட்ட பலத்த காயம்
படப்பிடிப்பில் தொடர்ந்து ஓடிய அமீர்கான் - காலில் ஏற்பட்ட பலத்த காயம்

By

Published : Jul 13, 2022, 3:16 PM IST

மும்பை (மகாராஷ்டிரா): பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் படம் லால் சிங் சத்தா. இப்படத்தில் நாக சைதன்யா, கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்வத் சந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலிவுட் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களையும், கதை களத்தையும் தேர்வு செய்து நடிப்பவர் அமீர் கான். தன்னுடைய படங்களின் படப்பிடிப்பு பணியில் ஒரு நொடியை கூட வீண் செய்யாமல் இருப்பவர்.

அமீர்கான், லால் சிங் சத்தா படப்பிடிப்பின் மீது தொடர்ந்து ஓடக்கூடிய காட்சியில் நடிக்கும் போது திடீரென அவரது முட்டியில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் படப்பிடிப்பு தடைபட்டு விடக்கூடாது என அந்த காட்சி முடியும் வரை நடித்துக் காட்டியுள்ளார்.

ஓடும்போது ஏற்பட்ட வலியைத் தவிர்க்க பிசியோதெரபி செய்து வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்டார். இது Forrest Gump என்ற ஆங்கில படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அமீர்கான் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிங்க:’விக்ரம்’ படத்தை புகழ்ந்த கேஜிஃப் மற்றும் பிரேமம் பட இயக்குநர்கள்

ABOUT THE AUTHOR

...view details