கடந்த ஞாயிறு காலை உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் குறித்து எதுவும் ஆதாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இந்த பனிக்காலத்தில் நந்தா தேவி பனிப்பாறை எவ்வாறு உருகி உடைந்துள்ளது என்பது புதிராகவே உள்ளது.
இந்த சூழலில் பிரபல மலை சறுக்கு கேப்டன் எம்.எஸ். கோலி இது குறித்து ஒரு சுவாரஸிய சாத்தியக்கூறு இருக்கலாம் என்கிறார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பின் அங்கத்தினராக இருந்த இவர் 1965 காலகட்டத்தில் இவர்களின் குழு அங்கு அணு கருவியை புதைத்துள்ளனர். இதுகூட இந்த பேரிடருக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் கேப்டன் கோலி.
1964ஆம் ஆண்டில் சீனா, அந்நாட்டின் சின்ஜியாங்கில் உள்ள மேற்கு பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. நந்தா தேவி சிகரத்தில் அணு சோதனை நடத்தியதா என்று கண்டறிய ப்ளுடோனியம் மூலம் தயார் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த கருவியை கடும் முயற்சிக்குப் பின் புதைத்தோம்.
இது புதைக்கப்பட்ட நிகழ்வும் சாதாரணமானது அல்ல. இந்தக் கருவியை எடுத்துக்கொண்டு 25,000 அடி உயரத்தில் ஏறி சென்றபோது, அங்கு பனிப்புயல் தீவிரமாக அடித்தது. எனவே, அதை மேலே கொண்டு செல்ல முடியாமல் அங்கே அழமாக தோண்டி புதைத்துவிட்டு வந்தோம்.