ஒடிசா: ஒடிசா மாநிலம், பிரம்மபூர் ரயில் நிலையம் அருகே திப்ருகர் - கன்னியாகுமரி இடையில் செல்லும் விவேக் விரைவு ரயில் வந்துகொண்டிருந்துள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனை அடுத்து அந்த ரயில் உடனடியாக அங்கேயே நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியே இறக்கிவிடப்பட்டுள்ளனர். தொடர்ந்து புகை எழுந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
Vivek Express: திப்ருகர் - குமரி இடையிலான நாட்டின் நீண்ட விரைவு ரயிலில் திடீர் புகை! - கன்னியாகுமரி செய்திகள்
திப்ருகர்-கன்னியாகுமரி இடையில் செல்லும் நாட்டின் மிக நீண்ட வழித்தட ரயிலான விவேக் விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் புகை விபத்தினால், ரயிலானது பிரம்மபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.
அப்போது ரயில் தண்டவாளத்தில் கிடந்த சாக்கு மூட்டை ரயில் சக்கரத்தில் சிக்கி அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால்தான் புகை ஏற்பட்டது எனக்கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி புகையைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ரயில் பிரம்மாபூர் ரயில் நிலையத்தில் தொழில் நுட்பக் குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரி பசந்த குமார் சத்பதி கூறியுள்ளார். இந்த தகவல் அங்குள்ள ரயில்வே துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நேபாளம் ஹெலிகாப்டர் விபத்து... 5 சுற்றுலா பயணிகள் பலி!