தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! விக்ரமின் ஸ்டைலிஷ் காட்சிகள் வெளியீடு.. - சினிமா செய்திகள்

Dhruva Natchathiram release date: விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தேதியை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Dhruva Natchathiram:  'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி..
Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 12:56 PM IST

சென்னை: ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டு தேதியுடன் படத்தில் இருந்து விக்ரமின் ஸ்டைலான சில காட்சிகள் இன்று (செப். 23) வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன். இவரை போலவே இவரது படங்களும் மிகவும் ஸ்டைலாக இருக்கும். இவரது படங்களில் காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். குறிப்பாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் தனது ஆக்ஷன் படங்களையும் வித்தியாசமான முறையில் எடுப்பவர் கௌதம் மேனன். இவர் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் நடித்துள்ளார். கருமேகங்கள் கலைகின்றன படத்தில் வித்தியாசமான நடிப்பில் கவனம் ஈர்த்தார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் 'துருவ நட்சத்திரம்' (Dhruva Natchathiram). கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது.

இப்படம் ஆக்சஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், திவ்யதர்ஷினி என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: "இதுல ஒரிஜினல் பீசே வருது" சந்திரமுகி 2 ரகசியம் உடைத்த ராகவா லாரன்ஸ்!

அதன் பிறகு தான் விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மட்டும் எஞ்சியிருந்த சமயத்தில், பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அப்பணிகள் தள்ளிப் போய் கொண்டே இருந்தது.

துருவ நட்சத்திரம் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாக கூறப்படுகிற நிலையில் திட்டமிட்டபடி படம் எப்படியும் வெளிவந்து விடும் என ரசிகர்கள் நம்பி உள்ளனர். மேலும் இப்படத்தில் விக்ரம் மிகவும் ஸ்டைலாக உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் படத்தின் டீசரும் வெளியாகி படத்தின்‌ மீதான எதிர்பார்பை குறையவிடாமல் செய்தது. மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு கட்டாயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் அப்டேட் இன்று (செப். 23) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை படத்தின் வெளியீட்டு தேதியுடன் படத்தில் இருந்து விக்ரமின் ஸ்டைலான சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தின் பெயர் ஜான். எனவே ஜான் உங்களை நவம்பர் 24ம் தேதி சந்திக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details