புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை பல ஜாம்பவான்களை கண்டுள்ளது. அந்த வகையில், "கேப்டன் கூல்" என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கும், விராட் கோலிக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இருவரும் இந்திய அணியின் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். நோக்கம் அணிக்கு வெற்றி தேடி தருவதாக இருந்தாலும், பரபரப்பான நேரங்களில் தோனி அமைதியாக செயல்படுவார். கோலியோ விறுவிறுப்புடன் இருப்பார். இது அவர்களுக்கான பிரத்யேக பாணி.
கடந்த 2022ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் முடிந்தபின், திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் கோலி. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை ஏற்காமல் சாதாரண வீரராகவே விளையாடுகிறார். கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தவித்த அவர், மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற கோலி, தோனி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "எனக்கு ஏற்பட்ட கடினமான நேரத்தில் அந்த சூழலில் மனைவி அனுஷ்கா சர்மா, சிறுவயது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினரை தவிர, என்னை அணுகிய ஒரே நபர் தோனி மட்டும் தான். அவர் தான் என்னை முதலில் அணுகினார்.