புதுடெல்லி : அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இன்டர்ன்ஷிப் போர்டல் மூலம் இளைஞர்களுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை தொடங்கி வைத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 மில்லியன் வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு” வேண்டும் என்றார்.
இது குறித்து தர்மேந்திர பிரதான் ட்விட்டரில், “ நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாக 2047 இருக்கும். அப்போது, இந்தியாவிற்கான சாலை வரைபடத்தை நாம் தயாரிக்கும் போது,இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் அதிக உற்பத்தித்திறனை உருவாக்குவதற்கும் அடுத்த 2-3 ஆண்டுகளில் 100 மில்லியன் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த நடவடிக்கையை ஆரம்பம் என்று கூறிய அமைச்சர், "அனைவருக்கும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்" என்று கூறினார். தொடர்ந்து, "NEP 2020 இளைஞர்களின் எதிர்காலத்தை தயார்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களுடன் தொழில்துறையை இணைக்க வலியுறுத்துகிறது.