பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையின் துணை தலைவரின் தற்கொலைக் குறிப்பை சிக்கமகளூரு காவல்துறையினர் வைத்திருக்கிறார்கள் என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் நேற்று(டிச.29) கர்நாடக சட்டமேலவையின் துணை தலைவரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மேலவை உறுப்பினருமான எஸ்.எல். தர்மே கவுடா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கவுடா விட்டுச்சென்ற நீண்ட மரணக் குறிப்பை சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் மீட்டுள்ளது.
அதில் அவரது சொத்து மற்றும் பல முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் உள்ளன. எனவே, இந்த நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை நாங்கள் வெளிப்படுத்தவில்லை" என்றார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை முடித்தவுடன், கவுடாவின் மரணக் குறிப்பின் உள்ளடக்கங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.