Dharmapuri MP Senthil Kumar Controversial speech in lok sabha டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த டிம்பர் 4ஆம் தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 19 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இன்று (டிச. 5) இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், இந்தி பேசும் மாநிலங்களை பொதுவாக கோ மூத்திர மாநிலங்கள் (கௌமுத்ரா) என்று அழைப்பதாகவும், அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்றும் அந்த மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்விகளையும் சுட்டிக்காட்டி திமுக எம்.பி. செந்தில் குமார் மக்களவையில் பேசினார். திமுக எம்.பியின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது.
செந்தில் குமார் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம், திமுக கூட்டணி கட்சியான காங்கிரசும், செந்தில் குமார் எம்.பி.யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, , கோ மூத்திர மாநிலங்கள் தொடர்பாக, மக்களவையில் செந்தில் குமார் எம்.பி பேசியதற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அது செந்தில் குமார் எம்.பியின் சொந்த கருத்து என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், கௌமுத்ராவை தாங்கள் மதிப்பதாகவும் இது குறித்து பேச விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோ முத்திரா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், "இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. செந்தில் குமார் எம்.பி, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும்" என பதிவிட்டு உள்ளார்.
அண்மையில் நடந்த 5 மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த அளவில் ஜொலிக்க முடியவில்லை. குறிப்பாக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. சனாதன எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே தற்போது செந்தில் குமார் எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க :தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு! எப்போ பதவியேற்பு தெரியுமா?