தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜனநாயகத்தின் வளர்ச்சிப் பாதையில் பங்களிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் - ஜக்தீப் தன்கர் - dhankhar speech in rajyaseva

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வளர்ச்சிப் பாதையில் முழு நம்பிக்கையுடன் பங்களிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்ற ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

RS welcome new Chairman Dhankhar, opposition seeks more time for smaller parties
RS welcome new Chairman Dhankhar, opposition seeks more time for smaller parties

By

Published : Dec 7, 2022, 5:10 PM IST

டெல்லி:குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் மாநிலங்களவைத் தலைவராக இன்று (டிசம்பர் 7) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகவும், இந்த சபையின் தலைவராகவும் தேசத்திற்கு சேவை ஆற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வளர்ச்சிப் பாதையில் முழு நம்பிக்கையுடன் பங்களிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த அவையில் உறுப்பினர்களுடன் முக்கியமானவற்றை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அலுவலக சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், 'மேல் சபை' அல்லது ‘மேன்மைமிக்கவர்களின் சபையாக’ தனித்துவத்துடன் முக்கியத்துவம் பெற்றது. சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபுகளை நிறுவுவதற்கும், சிறந்த விவாதங்களை முன்மாதிரியாக எடுத்துக்காட்டுவதற்கும், வழிகாட்டுதலுடன் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அரசியலமைப்பு எதிர் நோக்கும் சவால்களை சந்தித்து ஆலோசனைகளை பரிமாற்றம் செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது. இத்தகையை நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் அவை உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தியா உலகிற்கு வழிகாட்டும் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details