சென்னை: பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவர் விஜய் சின்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள், பீகார் மாநில மக்களை பற்றி பீகார் அரசு கவலைப்படுவதில்லை என கூறினர்.
இதனையடுத்து எதிர்கட்சியினர் சட்டபேரவையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளில் எவ்வாறு கலந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பினர்.