தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம்!

கரோனா விதிகளின்படி முகமூடிகளைச் சரியாக அணியாதவர்கள், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாத பயணிகள் மீது காவல் துறை அலுவலர்களின் உதவியுடன் உடனடி அபராதம் விதிக்கப்படும் என விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

Directorate General of Civil Aviation
Directorate General of Civil Aviation

By

Published : Mar 30, 2021, 5:32 PM IST

டெல்லி: விமான நிலையங்களில் கரோனா விதியை மீறுபவர்களிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை மீறும் பயணிகளுக்கு 'ஸ்பாட் அபராதம்' விதித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய சிவில் விமான ஒழுங்குமுறை விமான நிலைய இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து விமான நிலையங்களிலும் பணிபுரிபவர்கள் கோவிட் -19 நெறிமுறையின் அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். இதனை விமான நிலைய அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details