தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

25 லட்ச ரூபாயில் கிருஷ்ணருக்கு தொட்டில் செய்த பக்தர்கள் - worth Rs 25 lakh in Gujarat

குஜராத்தில் உள்ள கோயில் ஒன்றில் கிருஷ்ண ஜெயந்திக்கு பக்தர்கள் இணைந்து 25 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட தொட்டிலை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

Etv Bharat25 லட்ச ரூபாயில் கிருஷ்ணருக்கு தொட்டில் செய்த பக்தர்கள்
Etv Bharat25 லட்ச ரூபாயில் கிருஷ்ணருக்கு தொட்டில் செய்த பக்தர்கள்

By

Published : Aug 19, 2022, 4:11 PM IST

வதோதரா(குஜராத்) :இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் கிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 19) கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மகாபாரதத்தில் வரக்கூடிய புராணக் கதாபாத்திரமான கிருஷ்ணனின் பிறந்தநாளை அனைத்து இந்துக்களும் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா கிருஷ்ணர் கோயிலில் பக்தர்கள் பல காணிக்கைகளை செலுத்தினர்.

25 லட்ச ரூபாயில் கிருஷ்ணருக்கு தொட்டில் செய்த பக்தர்கள்

இந்த வரிசையில் கிருஷ்ணர் மீது உள்ள பக்தியை வெளிப்படுத்த கிருஷ்ணர் சிலைக்கு ரூ 25 லட்சம் மதிப்பில் ஊஞ்சல் வழங்கி வழிபட்டனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஊஞ்சல் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. இந்த தொட்டில் 200 கிராம் தங்கமும், 7 கிலோ வெள்ளியும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த கோவில் அதிகாரி கூறுகையில், “200 கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளியில் ஊஞ்சல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 24 முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்’ என்றார்.

இதையும் படிங்க:அயோத்தி தீப உத்சவ்வில் லட்சக்கணக்கான தீபம் ஏற்றி கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details