தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் இந்திய வம்சாவளி குடும்பம் - vinayagar chaturthi this year

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்தினர் விநாயகர் சதுர்த்தியை 26 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் இந்திய வம்சாவளி குடும்பம்
அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் இந்திய வம்சாவளி குடும்பம்

By

Published : Aug 27, 2022, 8:53 AM IST

மங்களூரு (கர்நாடகா):இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற ஆகஸ்ட் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலையின் வியாபாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ஷெர்லேக்கரின் குடும்பத்தினர், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வீட்டில் விநாயகரின் புதிய சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் இந்திய வம்சாவளி குடும்பம்

இதற்காக மங்களூரு மன்னகுடேயில் உள்ள சிலை தயாரிக்கும் கடையில் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி சிகாகோ கொண்டு செல்கின்றனர். இந்த வகையில் இம்முறையும் 4.5 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை வாங்கியுள்ளனர். இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக இதேபோல் விநாயகர் சிலையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க:சத்தீஸ்கரில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திருட்டு

ABOUT THE AUTHOR

...view details