மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர்-புனே நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள துல்ஜாபூர் தாலுகா பகுதியில் வசிக்கும் மக்கள் சோலாபூர் அருகே உள்ள பந்தர்பூர் கோயிலுக்கு சென்று டிராக்டரில் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோன்டி என்ற பகுதி அருகே லாரி ஒன்று பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது மோதியுள்ளது.
மகாராஷ்டிராவில் கோர விபத்து - நான்கு பேர் மரணம், ஆறு பேர் படுகாயம் - சோலாபூர் டிராக்டர் விபத்து
சோலாபூர் நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
Maharashtra
இந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:ஒபாமாவுக்கு கரோனா பாதிப்பு
Last Updated : Mar 14, 2022, 10:20 AM IST