கர்நாடகாவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,733 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 217 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடரும் மரணங்கள்... ஹவுஸ் புல் போர்டு போட்ட தகன மையம்! - Bengaluru crematorium
பெங்களூரு: சாம்ராஜ்பேட்டை டி.ஆர் மில் தகன மையத்தில், ஹவுஸ் புல் போர்டு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், நேற்று(மே.1) சாம்ராஜ்பேட்டையிலுள்ள டி.ஆர் மில் தகன மையத்திற்கு ஒரே நேரத்தில் 45 சடலங்கள் வந்துள்ளன. அங்கு, 20 சடலங்கள் தகனம் செய்வதற்கு மட்டுமே முடியும். இதுமட்டுமின்றி, மேலும் 19 சடலங்கள் தகனம் செய்திட முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தகன மையத்தின் கேட்டில் ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னதாக, பீன்யாவில் உள்ள எஸ்ஆர்எஸ் தகன மையத்தின் வெளியே 11 ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்த காணொலி வெளியாகியிருந்தது. தகன மையங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 40 சடலங்கள் தகனம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.