டெல்லி : தென்னகத்து நேதாஜி என அழைக்கப்படும் முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி விழாவும், 59ஆவது குருபூஜை தினமும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்கத் தேவரின் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு வாழ்க்கையை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “தேவர் ஜெயந்தி நன்நாளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். தேவர் மிகவும் துணிச்சலான, அதேநேரம் கனிவான உள்ளம் கொண்டவர்.
பொதுநலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். விவசாயிகள், தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தேவர் ஜெயந்தி நாளில் மரியாதை செலுத்தியுள்ளார். தேசியமும், தெய்வீகமும் எனதிரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் பசும்பொன்னில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க : தேவர் திருமகனாருக்கு முதலமைச்சர் புகழாரம்..!