பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடத்தப்பட்டது. இதில் ஐநா சபையின் முக்கிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலமாக பங்கேற்று உரையாற்றினர்.
நிகழ்வில் பேசிய ஐநா சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ்: "உலகிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்று திரண்டு இயற்கைக்கு எதிரான நமது போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் நமது வாழ்வில் வளமும் கண்ணியமும் பெருகும்.
பசுமையான பூமியை படிக்க வேண்டிய நாம் தற்போது ஆபத்தான சூழலில் உள்ளோம். எனவே அடுத்து வரும் காலகட்டங்களில் சரியான பாதையில் நாம் பயணிக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்களை தற்போதே நாம் வரையறை செய்ய வேண்டும். நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற எரிபொருள்களை தவிர்த்து மாற்று எரிசக்தியை முழுமையாக பயன்படுத்த நாம் தயாராக வேண்டும்.
இதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் அதிக அளவில் செய்ய வேண்டும். சிறப்பான நிதி ஆதாரம் கொண்ட இந்நாடுகள் தங்களின் வாக்குறுதிகளை செயல் வடிவங்கள் ஆக்கி விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு அமெரிக்கா நீதித்துறையில் உயர் பொறுப்பு!