லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த அஃப்தாப் அலி என்பவர், தனது உறவினர்களை காண பாகிஸ்தான் செல்ல பலமுறை முயற்சித்தும், விசா கிடைக்கவில்லை. அப்போது ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பு மூலம் அவருக்கு உதவி கிடைத்துள்ளது.
அவர்கள் விசா கிடைக்க உதவியுள்ளனர். அதற்கு பதிலாக அயோத்தியா கன்டோன்மென்ட்டை புகைப்படம் எடுத்து அனுப்ப கூறியுள்ளனர். அதன்படி அஃப்தாப் அலி அனுப்பியுள்ளார். அலி பாகிஸ்தான் சென்றதும் அவருக்கு மேலும் பல உதவிகளை செய்துள்ளனர். பிறகு அலி, ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு உளவாளியாக மாறியுள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, லக்னோ மற்றும் அயோத்தியில் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டம் மற்றும் ராணுவம் குறித்த பல்வேறு முக்கிய விவரங்களை வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் அலி ஐஎஸ்ஐயுடன் பகிர்ந்துள்ளார்.