2020-21 நிதியாண்டுக்கான சரக்கு போக்குவரத்து தொடர்பான புள்ளிவிவரங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் ஆயிரத்து 224.45 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்தாண்டு ஆயிரத்து 205.04 மில்லியன் டன் சரக்கு கையாண்ட நிலையில், தற்போது இரண்டு விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
அதேபோல், 2020-21 நிதியாண்டில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 634.9 கோடி ரூபாய் சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட மூன்று விழுக்காடு அதிகமாகும்.