தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை விட ஜனநாயக கடமையே பெருசு - பிகாரில் வாக்குப்பதிவு சாதனை - பிகார் சட்டப்பபேரவைத் தேர்தல்

பாட்னா: கரோனா பெருந்தொற்றால் நிலவும் நெருக்கடியான காலகட்டத்திலும் தற்போது நடைபெற்ற பிகார் சட்டப்பபேரவைத் தேர்தலில் 2015ஆம் ஆண்டு தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகவுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Bihar election
Bihar election

By

Published : Nov 9, 2020, 10:48 PM IST

பிகாரில் நடைபெற்றுவந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி முடிவடைந்ததையடுத்து 243 தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் மற்றும் 2ஆம் கட்ட தேர்தல்கள் முறையே கடந்த அக்டோபர் 28ஆம் தேதியும் நவம்பர் 3ஆம் தேதியும் நடைபெற்றன. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடந்ததுமுடிந்தது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்குச் சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர், கையுறைகள், முகக் கவசங்கள், சோப் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை நாளை (நவ. 10) காலை 8 மணியளவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை விட இந்தாண்டு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட 78 தொகுதிகளுக்கு நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி 71 உறுப்பினர்களுக்கான முதற்கட்ட தேர்தலில் 55.68 விழுக்காடும், 94 உறுப்பினர்களுக்கான இரண்டாவது கட்ட தேர்தலில் 55.70 விழுக்காடும் மூன்றாவது கட்ட தேர்தலில் 60 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியதாகவும் கூறியுள்ளது.

கரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நாட்டில் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.

ABOUT THE AUTHOR

...view details