பரித்கோட்: பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டத்தில் தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர், இன்று காலை மர்ம நபரகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளராண பிர்தீப் சிங் கோட்காபுராவில் தனது கடையைத் திறக்க காலையில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பக்கியால் சுட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பிர்தீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இந்த சம்பவத்தில் பிரதீப் சிங்கை சுட்ட நபர் ஒருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப்பில் தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர் மர்ம நபர்கள் சுட்டு கொல்லப்பட்ட சிசிடிவி காட்சி கடந்த 2015-ம் ஆண்டு பரித்கோட்டில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் நகல் திருடப்பட்ட வழக்கில் பிர்தீப் சிங் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளி வந்திருந்தார். தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தேராவை தலைமையிடமாகக் கொண்ட சிர்சாவில் உள்ள தனது ஆசிரமத்தில், இரண்டு பெண் சீடர்களை பாலியல் வண்கொடுமை செய்த வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சாதி மாறி காதலித்த மகளை ஆணவக்கொலை செய்த தந்தை கைது!