ஹரியானா மாநிலத்தின் பிரபல சாமியாரான தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர் குருகிராம் பகுதியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
53 வயதான குர்மீத் ராம் ரஹீம் சிங், தனது பக்தர் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 20 வருடம் சிறை தண்டனை பெற்றவர். 2017ஆம் ஆண்டு முதல் ஹரியானாவின் சுனரியா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இவருக்கு ரத்த அழுத்தம், வயிறு வலி போன்ற பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.