புதுச்சேரி:மாநிலத்தில் 100% கரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் முயற்சியாக சுகாதாரத்துறை ஒரு நாள் மாநிலம் தழுவிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று(அக்.25) துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 91% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிள்ளையார்குப்பம், நல்லவாடு ஆகிய இரண்டு கிராமங்களும் 100% போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியை தாண்டி விட்டோம் இது மிகப்பெரிய வரலாற்று சாதனை. அனைவரின் கூட்டு முயற்சியால் ஒரு ஜனநாயக நாடால் சாதிக்க முடியும் என்பதை நாம் நிரூபித்து இருக்கிறோம். பாரதப் பிரதமரும் பாராட்டியுள்ளார். எனவே புதுச்சேரியும் இந்த வரலாற்றை படைக்க வேண்டும்.