பெங்களூர்: பெங்களூரில் உள்ள மகாலட்சுமி லேஅவுட்டில் வசிக்கும் ரூபேஷ் எனும் நபர், தனது தாயின் மரணத்திற்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை(மே 25) மாண்டியா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு வந்த ரூபேஷ் தனது பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார்.
மனவுளைச்சலால் பிஎம்டபிள்யூ காரை ஆற்றில் தள்ளிய நபர் - மனவுளைச்சல்
மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள நிமிஷாம்பா கோயில் அருகே மனமுடைந்த நபர் ஒருவர் பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவில் மனவுளைச்சலால் பிஎம்டபிள்யூ காரை ஆற்றில் தள்ளிய நபர்
பின்னர் காரைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை(மே 26) தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரின் உரிமையாளர் ரூபாஷை என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் , அப்பொழுது அவரது தற்போதைய மனநிலை தெளிவாக இல்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!