இந்திய புவிசார் தொழில்நுட்ப நிறுவனமான சி.இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் விண்வெளித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் இயங்கும் இந்நிறுவனம், இருப்பிட அடிப்படையிலான மென்பொருள் சேவை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பணிகளைச் செய்து வருகிறது.
புவிசார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் விண்வெளி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
பெங்களூரு: புவியியல் தீர்வுக்காக புவிசார் தொழில்நுட்ப நிறுவனமான சி.இ. இன்ஃபோ சிஸ்டம்ஸூடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை விண்வெளித் துறை கையெழுத்திட்டுள்ளது.
விண்வெளி துறை
இந்த ஒப்பந்தம் மூலம், இரு அணிகளும் கூட்டாக இணைந்து கண்காணிப்பு தரவுத்தொகுப்புகள், வலை சேவைகள், மேப் மி இந்தியா, புவான், வேடாஸ் மற்றும் மோஸ்டாக் ஜியோபோர்டல்ஸில் கிடைக்கும் ஏபிஐகளைப் பயன்படுத்தி முழுமையான புவியியல் தீர்வுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதில், இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் ஆர். உமா மகேஷ்வரனும், சி.இ நிறுவனம் சார்பில் ராகேஷ் வர்மாவும் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க:சாதி தரவின்றி வெளியான 2011இன் மக்கள் தொகை கணக்கு!