ஐதராபாத் :திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்படும் சினிமா பாடல்களில் காப்புரிமை விதிமீறல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தனியார் மற்றும் சினிமா பாடல்களை பொது நிகழ்ச்சிகளில் ஒலிப்பரப்புவதன் மூலம் சந்திக்க நேரிடும் சட்ட ரீதியிலான காப்புரிமை விதிமீறல்கள் பிரச்சினைகளை தவிர்ப்பது தொடர்பாக இந்த கொள்கை நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருமணம் உள்ளிட்ட பொது நிகழச்சிகளின் போது சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதற்காக ராயல்டி எனப்படும் காப்புரிமை மீறல்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டது குறித்து தனியார் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட பல்வேறு புகார்களை தொடர்ந்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புகார்கள் தொடர்பாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாடல்கள் ஒலிபரப்பு நிகழ்த்தியதற்காக காப்புரிமை சங்கங்கள் வசூலித்ததாகக் கூறப்படுவது காப்புரிமை சட்டம் 1957ன் பிரிவு 52 (1) (za) சட்டப்பிரிவுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலக்கியம், நாடகம், இசைக் நிகழ்ச்சிகள் மதம் அல்லது மற்ற விழாக்களின் போது ஒலிபரப்ப்பபடும் ஒலிப்பதிவுகள் பதிப்புரிமை மீறலில் இருந்து விலக்கு பெற்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திருமண ஊர்வலங்கள் மற்றும் அது தொடர்புடைய சமூக விழாக்கள் உள்ளிட்ட மத சடங்குகளும் இந்த விலக்கின் கீழ் வருவதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு காப்புரிமைத் தொகை கோர காப்புரிமை சங்கங்களுக்கு அதிகாரம் கிடையாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த அல்லது பிற விழாக்களின் போது சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது ராயல்டி கோருவதற்கு காப்புரிமை சங்கங்களுக்கு அனுமதி கிடையாது என மத்திய ஊக்குவிப்பு, தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :அமலாக்கத்துறை இயக்குனரின் பணி நீட்டிப்பு... செப்.15 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!