தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விநாயகரை வழிபட்ட பாஜக பிரமுகர் ரூபி கானுக்கு நோட்டீஸ்

விநாயகர் சிலையை நிறுவி வழிபட்ட இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரூபி கானுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

deoband
deoband

By

Published : Sep 3, 2022, 8:08 PM IST

அலிகார்:உத்தரப்பிரதேச மாநிலம், அலிகாரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக பிரமுகர் ரூபி கான், தனது வீட்டில் விநாயகர் சிலையை நிறுவி வழிபாடு செய்தார். இஸ்லாமியரான ரூபி கான், இந்து முறைப்படி வழிபாடு செய்ததற்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தியோபந்த் முப்தி என்ற இஸ்லாமிய மதகுரு, விநாயகர் சிலையை நிறுவி வழிபாடு செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, ரூபி கானுக்கு ஃபட்வா(நோட்டீஸ்) அனுப்பியுள்ளார். ரூபி கானின் நடவடிக்கை இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று ஃபட்வாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூபி கானுக்கு ஃபட்வா வழங்கப்பட்டதற்கு, பாஜகவில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஃபட்வா வெளியிட்டவர்கள் ஜிகாதிகள் என்றும், அவர்கள்தான் பயங்கரவாத மற்றும் ஜிகாதி சிந்தனை உள்ளவர்கள் என்றும் விமர்சித்தனர்.

இதையும் படிங்க:மோடிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக கைதான டீஸ்டா செதல்வாட்டிற்கு இடைக்கால ஜாமீன்

ABOUT THE AUTHOR

...view details