தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவரை உடனடியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவரை உடனடியாக மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகானின் ஆதரவாளர்கள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி தலைவரை உடனடியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி தலைவரை உடனடியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 21, 2022, 6:34 PM IST

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு கூட்டம் மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டூராவ், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் முக்கிய நிர்வாகிகளுக்கு இந்த கூட்டம் தொடர்பான எந்த ஒரு அழைப்பும் விடுக்கவில்லை என்று கூறி முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் முன்னாள் அரசு கொறடா அனந்தராமனின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கட்சியின் அலுவலகத்தில் கோஷங்கள் எழுப்பி முற்றுகையிட்டனர். மாநிலக் கட்சி தலைவர் ஏ வி சுப்பிரமணியனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் ஒரு போர்கொடி தூக்கி உள்ளது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவரை உடனடியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவரை உடனடியாக மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகானின் ஆதரவாளர்கள் கட்சித் தலைவர் ஏவி சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கோஷங்களை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையும் படிங்க:குஜராத்தில் 2 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details