தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது! - தட்சிண கன்னடாவில் தாயை பலாத்காரம் செய்த மகன்

கர்நாடகாவில் நடந்த கொடூரமான சம்பவம்தான் இது. ஒரு இளைஞன் தனது தாயை இருமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அப்பெண் தானாகச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இத்தீஞ்செயல் புரிந்தவர் மீது காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நபர் கைதுசெய்யப்பட்டார்.

ற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது
ற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது

By

Published : Jan 14, 2022, 7:45 PM IST

தட்சிண கன்னடா: கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புத்தூர் வட்டத்தில் நேற்று (ஜனவரி 13) இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் திருமணமானவர், அந்நபரின் மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தகவலின்படி, ஜனவரி 12 அன்று இரவு உணவுக்குப் பின் 58 வயது மதிக்கத்தக்க அந்தத் தாயும், மகனும் உறங்கச் சென்றனர். பின்னர், நள்ளிரவைத் தாண்டி 3 மணியளவில் அந்த இளைஞர் தனது தாயின் அறைக்குச் சென்று அவரின் வாயில் துணியால் அடைத்து பாலியல் வன்புணர்வு செய்தார்.

மேலும், அந்த இளைஞர் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என்று அவரது தாயை மிரட்டியுள்ளார். அத்தோடு அந்நபர் விட்டுவிடவில்லை, காலையிலும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.

பெற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது

இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றார். பின்னர், காவல் நிலையத்தில் கொடூரமாக நடந்துகொண்ட மகன் மீது புகார் கொடுத்தார். தொடர்ந்து புத்தூர் ஊரக காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரித்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க: பங்குச்சந்தையில் ஆட்டம் காட்டிய கரடி!

ABOUT THE AUTHOR

...view details