பனாஜி:பிரபல நடிகையும், பாஜக பிரமுகருமான சோனி போகத், கோவாவில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு தொடர்புடைய கர்லீஸ் ஹோட்டல், ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அதுதொடர்பான விசாரணையில் ஹோட்டல் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஹோட்டலை இடிக்கும் பணியில் கோவா அரசு ஈடுபட்டுள்ளது.
சோனாலி போகத் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் தி கர்லீஸ் உணவக உரிமையாளர் எட்வின் நூன்ஸ்-ம் ஒருவர். இந்த உணவகத்தில் தங்கியிருந்த போது சோனாலி போகத்துக்கு அவரின் உதவியாளர் போதை மருந்து கொடுத்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.