தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிச்சையல்ல, உரிமை- ஃபரூக் அப்துல்லா! - Farooq Abdullah

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பிச்சை அல்ல, எங்கள் உரிமை என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா கூறினார்.

Farooq Abdullah
Farooq Abdullah

By

Published : Oct 25, 2021, 8:37 AM IST

பூஞ்ச் (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோருவது பிச்சையல்ல, மக்களின் உரிமை, அதற்காக நாங்கள் போராடுகிறோம் என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை (அக்.24) தெரிவித்தார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா மாந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவைத் தவிர நாட்டில் அமைதிக்கு வேறு வழி இல்லை. அப்போதுதான், நாமும் கண்ணியத்துடனும், நிம்மதியுடனும் வாழலாம்.

பிச்சை அல்ல உரிமை

சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ மறுசீரமைப்புக்கான போராட்டத்தைத் தொடர்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். நாங்கள் பிச்சை எடுக்கவில்லை, எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம். இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க முடியும்.

ஜவஹர்லால் நேரு, மன்மோகன் சிங், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் உள்பட நாட்டின் அனைத்து பிரதமர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வருந்துவோம், தடுக்க மாட்டோம்- ஜவஹர்லால் நேரு

தற்போதைய பிரதமர் மோடி, லாகூரில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். என்ன பயன்? 1947இல் சுதந்திரத்திற்குப் பிறகு, அனைத்து மாநிலங்களும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டன, ஆனால் அப்போதும், ஜம்மு-காஷ்மீர் தனிமாநிலமாக இருந்தது, அது ஒன்றிணைக்கப்படவில்லை, ஆனால் ஒரு நிபந்தனை- வாக்கெடுப்பு மூலம் இணைக்கப்பட்டது” என்றார்.

தொடர்ந்து அவர் சட்டப்பிரிவு 370 பற்றி பேசுகையில், “இந்த சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது. ஏனென்றால் ஜம்மு -காஷ்மீர் மக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் வாக்கெடுப்பு நடத்த விரும்பினர், அதன் பிறகு அதை ஒழிக்க வேண்டும். ஜவஹர்லால் நேருவும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதைத் தேர்ந்தெடுத்தால், அதற்காக நாங்கள் வருந்துவோம், ஆனால் அவர்களைத் தடுக்க மாட்டோம் என்று பிரதமராக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

முன்னர், டெல்லிக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையிலான இடைவெளியை இணைக்க இதயங்களை வென்று பாலம் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை நிலைகுலையச் செய்வதன் மூலம் இதயங்களை வெல்ல முடியாது. ஒரு மாநிலம் தரமிறக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாக நடந்திருக்க வேண்டும். நிலையான அமைதிக்காக மக்களின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : ஆர்யன் கான் விவகாரம்; ஷாருக் கானுக்கு அத்வாலே அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details