டெல்லி: டெல்லியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் G20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் தண்ணீர் தேங்கி இருப்பது போல் உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் விவாதம் செய்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு G20யில் அழைப்பு தராதது குறிப்பிடத்தக்கது.
G20 உச்சி மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது போல் உள்ள காட்சிகளை பயன்படுத்தி இளைஞர் நலன் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி தனது X தளத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் G20 உச்சி மாநாடு தலைவர் கலந்து கொள்வதற்கு கட்டப்பட்ட பாரத் மண்டபம் எனக் குறிப்பிட்டு "விகாஸ் நீச்சல் அடிக்கிறான்" என கூறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் விகாஸ் என்ற சொல்லை வளர்ச்சி என்ற அடிப்படையில் அவர் குறிப்பிட்டு இந்த பதிவை செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆப்பரிக்க நாடுகள் G20 நாடுகள் அமைப்பில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது. மேலும் ரஷ்யாவை எதிர்க்காமல் உக்ரைன் ரஷ்யா மோதலை நிவர்த்தி செய்யும் வகையிலான விவாதங்கள், டெல்லி ஜி20 கூட்டு பிரகடனத்தில் இடம்பெற்று இருந்தன.
இதையும் படிங்க:G20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!