தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 9, 2021, 10:37 AM IST

Updated : Aug 9, 2021, 11:41 AM IST

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு 21லிருந்து 45ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

Delta Plus cases
Delta Plus cases

மும்பை:இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்துவரும் நிலையில், டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம்வரை 21ஆக இருந்த டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப், "மகாராஷ்டிராவில் 27 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 45 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பூசி, நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

மக்கள் பயப்படத் தேவையில்லை. ஜல்கான், ரத்னகிரி, தானே உள்ளிட்டப் பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்துவருகிறது. அதற்காக கூடுதல் கட்டுபாடுகள் விதிக்கப்படும் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா மூன்றாம் அலை, டெல்டா பிளஸ் பரவல்- மா. சுப்பிரமணியன் பதில்!

Last Updated : Aug 9, 2021, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details