தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தலுக்குப் பின் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - அமித் ஷா தகவல் - ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தி முடித்தபின் மாநில அந்தஸ்து திரும்பி வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Amit Shah
Amit Shah

By

Published : Oct 23, 2021, 10:30 PM IST

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின்னர் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை ஸ்ரீநகர் சென்ற அவரை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விமான நிலையத்தில் வரவேற்றார்.

அங்கிருந்து புறப்பட்ட அமித் ஷா, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல் பர்வீஸ் அகமது தாரின் குடும்பத்தினரை அவரது இல்லதிற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் பாதுகாப்புப் படையின் மூத்த அலுவலர்களுடன் அமித் ஷா ஆலோசனை ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், "பயங்கரவாதமும் வளர்ச்சியும் ஒன்றாக செயல்பட முடியாது. வளர்ச்சியை அடைய நாம் முதலில் அமைதியை அடைய வேண்டும்.

இதுவரை பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு மரணமடைந்துள்ளனர். இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும்.

அதற்கான முன்னேற்றத்தை நோக்கி அரசு முனைப்பு காட்டிவருகிறது. முதலில் தொகுதி மறுவரைவு மேற்கொள்ளப்பட்டு, விரைவில் தேர்தல் நடத்தப்படும். பின்னர் மாநில அந்தஸ்து திரும்பி வழங்கப்படும். முன்பு வன்முறையில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் தற்போது ஆக்கப்பூர்வமான வளர்ச்சி குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: அயோத்தி சென்று ராமரை வழிபடும் கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details