டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று தர குறியீடு (ஏர் குவாலிட்டி இன்டக்ஸ்) 303 புள்ளிகளை எட்டி காற்றின் மாசு நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் (எஸ்.ஏ.எஃப்.ஏ.ஆர்) அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் தொடர்ந்து மோசமான நிலையில் காற்று மாசு - டெல்லியில் தொடர்ந்து மோசமான நிலையில் காற்றுமாசு
டெல்லியில் இன்றும் காற்று மாசுபாடு தொடர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளதாக சஃபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Delhi's air quality remains 'very poor'
டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால், டெல்லியின் பல பகுதிகள் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது பஞ்சாப் மாநிலம் வரை நீண்டுள்ளது.
காலை நிலவரப்படி, காற்று மாசுத் துகள்கள் 261ஐ எட்டியுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் 500 மீட்டர் தொலைவு வரை மாசுபாடு காணப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.