தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஊசலாடும் காற்று மாசு - மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம்

டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமாகவும் இல்லாமல், சாதாரணமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் ஊசலாடி வருவதாக சஃபர் தெரிவித்துள்ளது.

Delhi's air quality oscillates between 'poor' and 'moderate' categories
Delhi's air quality oscillates between 'poor' and 'moderate' categories

By

Published : Nov 18, 2020, 12:49 PM IST

டெல்லி:மாநிலத்தில் காற்று மாசுபாட்டினை கண்காணிக்கும் நிறுவனமான சஃபர் தெரிவித்த தகவலின்படி, காற்று மாசுபாட்டின் சராசரி குறியீடு 132ஆக உள்ளது. நேரு நகர், ஆர்.கே புரம் ஆகிய பகுதிகளில் அவை முறையே 227 மற்றும் 217ஆக உள்ளன. டெல்லி சாலைகளில் அவை 102ஆக உள்ளன.

எனவே, காற்று மாசுபாட்டினை கணக்கிடுவது சற்று சிக்கலாகவே உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி மக்கள் புகையால் துன்புற்றதாகவும், கண்களில் எரிச்சல்களையும் உணர்ந்துள்ளனர். பின்னர் பெய்த மழையால் இதுபோன்ற விளைவுகள் சற்று குறைந்துள்ளன. அரசு இதுபோன்ற சிக்கல்களை நிரந்தரமாக தடுக்க முயற்சிகளை செய்யவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையில், டெல்லி அரசாங்கம் காற்று மாசினை குறைக்கும் பொருட்டு 'ரெட் லைட் ஆன், காடி ஆஃப்' என்ற திட்டத்தை இரண்டாம் கட்டமாக செயல்படுத்திவருகிறது.

இதையும் படிங்க:அபாய கட்டத்தை நெருங்கும் காற்று மாசு: டெல்லி அரசு எடுத்துள்ள அதிரடி திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details