புதுடெல்லி: கரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை டெல்லியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் டெல்லியில் ஊரடங்குத் தளர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி உயிரியல் பூங்கா சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படயிருக்கிறது.
திறப்பையொட்டி, உயிரியல் பூங்கா வளகாத்தினுள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி உயிரியல் பூங்காவில் புலி டெல்லி உயிரியல் பூங்கா இயக்குநர் ரமேஷ் குமார் பாண்டே இதுதொடர்பாக கூறுகையில், வரும் ஆகஸ்ட் -1ஆம் தேதி முதல் டெல்லி உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படயிருக்கிறது.
டெல்லி உயிரியல் பூங்காவில் யானை ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு
அதே நேரத்தில், ஜூலை 31ஆம் தேதி முதல் சுற்றுலாப்பயணிகள் இதற்கான நுழைவுச்சீட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இங்கு ஒரு குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இங்கு இரண்டு ஷிஃப்ட்டுகளாக சுற்றுலாப் பயணிகள் பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் நேரத்தில் கரோனா விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். அதேபோல், உயிரியல் பூங்கா வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்.
சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசங்கள் அணிவதும், வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும் பின்பற்றப்படும்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா இரண்டாவது அலை தொடங்கி சில நாட்கள் திறந்திருந்த, டெல்லி உயிரியல் பூங்கா, ஏறக்குறைய ஒரு ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளம்: மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்