தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

35 துண்டுகளான லிவிங் டூகெதர் காதலி; அமெரிக்கன் க்ரைம் தொடர் போல் திட்டம் தீட்டிய காதலன் - காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டிய காதலன்

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது லிவிங் டூ கெதர் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharatதிருமணம் செய்யக் கூறிய காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டிய காதலன் கைது
Etv Bharatதிருமணம் செய்யக் கூறிய காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டிய காதலன் கைது

By

Published : Nov 14, 2022, 6:30 PM IST

Updated : Nov 14, 2022, 9:52 PM IST

டெல்லி:டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியை கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, நகரின் வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்திய நபரை டெல்லி காவல் துறையினர் நேற்று முன்தினம் (நவ-12) கைது செய்தனர். மேலும் அந்நபரிடம் மீதமுள்ள பாகங்களை வீசிய இடங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட அஃப்தாப் அமீனிற்கும் அவரது காதலி ஷ்ரதாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் அஃப்தாப், ஷ்ரதாவை கழுத்தை நெரித்துக்கொன்றுள்ளார். பின்னர் ஷ்ரதாவின் உடலை 35 கூறுகளாக வெட்டி, டெல்லியில் வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக நவம்பர் 7அன்று ஷ்ரதாவின் பெற்றோர் மெஹ்ராலி காவல் நிலையத்தில் அவர்களது மகளைக் காணவில்லை என அளித்த புகாரையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து அஃப்தாப் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, மே 18 அன்று திருமணம் தொடர்பாக அஃப்தாப் அவரது காதலியுடன் சண்டையிட்டதாகவும், வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் ஷ்ரதாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

திருமணம் செய்யக்கூறிய காதலி - கொன்று 35 துண்டுகளாக வீசியெறிந்த காதலன் கைது

முன்னதாக அஃப்தாப்பும், ஷ்ரதாவும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளனர். சமீபத்தில் ஷ்ரதா திருமணம் செய்யக்கோரி அஃப்தாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் கோபமடைந்த அஃப்தாப் கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கன் க்ரைம் சீரிஸ் டெக்ஸ்டர்: இதற்கிடையில் அஃப்தாப் அவரது காதலி ஷ்ரதாவை கொன்றதற்குப் பின் அவர் வழக்கமாக பார்க்கும் அமெரிக்கன் க்ரைம் தொடரான டெக்ஸ்டர் படத்தில் வரும் ஒரு காட்சி போல செயல்பட்டுள்ளார். ஷ்ரதாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைப்பதற்கு புதிதாய் மூன்று ஃப்ரிட்ஜ்களை விலைக்கு வாங்கியுள்ளார்.

மேலும் உடலை துண்டுகளாக வெட்டினால் எளிதாக அப்புறப்படுத்தமுடியும் என யோசித்து இந்த காரியத்தை செய்ததாக காவல்துறையிடம் அஃப்தாப் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதிலும் அஃப்தாப் செஃப் தொழில் செய்து வருவதால் எளிதாக உடல்களை வெட்டி இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நாய்க்கு தூக்கு: இளைஞர்கள் கொடூரச் செயல் - வைரல் வீடியோ

Last Updated : Nov 14, 2022, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details