யமுனா ஆற்றின் மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
குறிப்பாக, ஹரியானாவில் உள்ள ஹாத்னிகுண்ட் அணையிலிருந்து யமுனா நகர் மாவட்டத்திலுள்ள யமுனா ஆற்றில் கூடுதலாகத் நீர் திறந்துவிடப்படுவதால் நீர்வரத்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஹாத்னிகுண்ட் பகுதியில் இருந்து 352 கன அடி நீர் மட்டும் திறந்துவிடப்படும் நிலையில், தற்போது 17,827 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட்.1) காலை நிலவரப்படி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவான 205.33-ஐ நெருங்கியுள்ளது. தற்போது, ஆற்றின் நீர் மட்டம் 205.30ஆக உள்ளது.