டெல்லி: பிரபல ஏர்வேய்ஸ் நிறுவனமான ஏர் இந்தியா ஊழியர்களின் அதிகாரப்பூர்வ குடியிருப்புகள், டெல்லி வசந்த் விஹாரில் உள்ளது. இங்குள்ள நிர்வாகம் சரியாக குடியிருப்புகளை பராமரிக்கவில்லை என தெரிகிறது. அதிலும் தண்ணீர் வசதி இல்லை என்றும், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருவதாகவும் குடியிருப்பில் வாழும் சுக்ஜித் சிங் தெரிவித்தார்.
ஏர் இந்தியா ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படுகிறதா? - Air India colony
ஏர் இந்தியா ஊழியர்களின் அதிகாரப்பூர்வ காலனியில் வசிப்பவர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படுகிறதா?
இந்த நிலையில் ஏர் இந்தியாவின் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை டாடா நிறுவனம் பிடித்தம் செய்ய வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களது ஊதியம் குறைந்து விடுமோ என்று ஏர் இந்தியா காலனியில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கே சவால் விட்ட பாஜக மூத்த தலைவர்