டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எந்த வித முன்னறவிப்பும் இன்றி டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாகவும் அதனால் விடுதி பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் சாப்பாட்டு நேரம் தடைபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகலை பட்டபட்டிப்பு பயிலும் ஆண்களின் விடுதிக்கு திடீரென சென்ற ராகுல் காந்தி சென்றார். வெள்ளை நிற டி-சர்ட், டிரவுசர், ட்ரிம் செய்த தாடி என புது தோற்றத்தில் வந்த ராகுல் காந்தியை கண்ட மாணவர்கள் திரண்டு வந்தனர். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி அனைவருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தற்போது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. ராகுல் காந்தி எந்த வித முன் அறிவுப்பும் இன்றி தீடீரென மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாகவும், அதனால் விடுதியில் திடீர் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடந்த மே 5 ஆம் தேதி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திடீரென பல்கலைக்கழக முதுகலை மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்ததாகவும், ராகுல் காந்தியுடன் வெளி ஆட்கள் நிறைய பேர் விடுதிக்குள் நுழைந்ததால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.