டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசித் திட்டம் குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியில் 18-44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த டெல்லிக்கு 2.5 கோடி டோஸ்கள் தேவைபடுகின்றன. எனவே, டெல்லிக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த 80 லட்சம் டோஸ்கள் தேவை. ஆனால் மே மாதம் 16 லட்சம் டோஸ்கள்தான் கிடைத்துள்ளன.