தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்றாவது நாளாக டெல்லியில் நீடிக்கும் கடும் காற்று மாசு..! - காற்று மாசு

டெல்லியில் மூன்றாவது நாளாக நீடித்து வரும் கடும் காற்று மாசு சூழல் அப்பகுதி மக்களை அவதிக்குள்ளக்கியுள்ளது

மூன்றாவது நாளாக டெல்லியில் நீடிக்கும் கடும் காற்று மாசு..!
மூன்றாவது நாளாக டெல்லியில் நீடிக்கும் கடும் காற்று மாசு..!

By

Published : Nov 5, 2022, 6:41 PM IST

புது டெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு சூழல் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. காற்று மாசை அளவிடும் அளவுகோளான AQI படி, இன்று(நவ.5) காலை தலைநகரின் காற்று மாசு 431 ஆகவிருந்தது. நேற்று(நவ.4) இதே காலை வேளையில் காற்று மாசு 472 AQI ஆக அறியப்பட்டது.

நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் காலை 7 மணியளவில், காற்று மாசின் அளவு மிகத் தீவிரமாக 529 மற்றும் 478 AQI யாக இருந்தது. மேற்கு டெல்லியிலுள்ள திர்பூரில் காற்று மாசு 534 AQI யாக கண்டறியப்பட்டது. இந்த 'AQI' எனப்படும் 'Air quality index'ஐ பொருத்தவரை 0 - 100க்குள் இருந்தால் அது நல்ல நிலையாகவும், 100 - 200 வரை இருந்தால் அது மிதமான நிலையாகவும்,

200 - 300 வரை போனால் அது மோசமான நிலையாகவும், 300 - 400 வரை இருந்தால் அது மிக மோசமான நிலையாகவும், 400 - 500 மற்றும் அதற்கும் மேலான அளவுகளில் இருப்பதை அதைக் கடுமையான நிலையாகப் பார்க்கப்படுமென 'SAFAR(System of Air and Weather Forecasting Research)' தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி வாழ் குடிமக்கள் காற்று மாசு சூழலின் காரணத்தால் மூச்சுத் திணறலிலும், கண்கள் எரிச்சலிலும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், டெல்லியில் நீடித்து வரும் இந்த நிலை இன்று(நவ.5) முதல் இன்னும் மோசமாகுமென தெரிகிறது.

இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சரண் நெகி காலமானார்

ABOUT THE AUTHOR

...view details