தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிர்! - 14 ஆண்டுகள் இல்லாத அளவு குளிர்

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று குளிரானது 7.4 டிகிரி செல்சியஸ் அளவு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Delhi
Delhi

By

Published : Nov 20, 2020, 3:24 PM IST

டெல்லி தலைநகரில் இன்று (நவ. 20) குளிரானது 7.5 டிகிரி செல்சியஸ் என மிகக் குறைந்த வெப்பநிலையாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் இல்லை எனவும், ஒரு சாதனை படைத்துள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு தனியார் முன்கணிப்பு நிறுவனமான ஸ்கைமெட் வானிலை வல்லுநர் மகேஷ் பலவத் கருத்துப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்ததால், நகரம் குளிர் அலை நிலைகளைக் கண்டது.

சமவெளிகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும்போது ஒரு குளிர் அலை இருக்கும் எனவும், அது தொடர்ச்சியாக இரண்டு நாள்களுக்கு இயல்பைவிட 4.5 நோட்சுகள் குறைவாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு நவம்பரில் 7.4 டிகிரி செல்சியஸ் அளவு மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பரில் 7.6 டிகிரி செல்சியஸும், 2018ஆம் ஆண்டு 10.5 டிகிரி செல்சியஸும், கடந்தாண்டு 11.5 டிகிரி செல்சியஸும் என மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி, சாதனை படைத்துள்ளது.

1938ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மிகக் குறைந்த வெப்பநிலையாக 3.9 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இது குறித்து பலவத், "பனி நிறைந்த மேற்கு இமயமலையிலிருந்து குளிர்ந்த காற்று வீசுவதால் வெப்பநிலை அளவானது குறைந்துவருவதால், இதேபோன்ற நிலை சனிக்கிழமை வரை தொடரும்.

வரும் நவம்பர் 23ஆம் தேதி ஒரு புதிய மேற்கத்திய இடையூறு (குளிர்ந்த காற்று அலை) வடமேற்கு இந்தியாவை தாக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்த மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை, நவம்பர் 16 ஆம் தேதி தவிர, மேகமூட்டம் இல்லாத நிலையில் சாதாரணமாக 2-3 டிகிரி செல்சியஸாக உள்ளது. நேற்று (நவ. 19) நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செஸ்லியஸ் பதிவாகியுள்ளது என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details