தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் வேகமெடுக்கும் கரோனா: தலைநகரில் 20 ஆயிரத்தை தாண்டும் தொற்று பாதிப்பு

தலைநகர் டெல்லியில் இன்று ஒருநாளில் மட்டும் 20 ஆயிரத்து 181 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மீண்டும் வேகமெடுக்கும் கரோனா
மீண்டும் வேகமெடுக்கும் கரோனா

By

Published : Jan 8, 2022, 10:35 PM IST

டெல்லி: கரோனா, ஒமைக்ரான் தொற்று வகைகள் இந்தியா முழுவதும் மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்கும்விதமாக, வார இறுதி ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துவருகின்றன.

இருப்பினும், நாள்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியிலும் கரோனா, ஒமைக்ரான் தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1,02,965 பேருக்கு பரிசோதனை

இந்நிலையில், டெல்லியில் நேற்று (ஜனவரி 7) 79 ஆயிரத்து 946 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை உள்பட மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 965 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளுக்கு 19.60 விழுக்காடு அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்று (ஜனவரி 8) ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்தனர். தற்போது, மொத்தம் 48 ஆயிரத்து 178 பேர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், 25 ஆயிரத்து 909 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

முன்னதாக, கடந்த மே 2ஆம் தேதி 20 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அப்போது 407 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தினமும் 22 கி.மீ. சைக்கிளிங்: மன ஆரோக்கியத்துடன் வாழும் 81 வயது மூதாட்டி

ABOUT THE AUTHOR

...view details