தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் டிராக்டர் பேரணி- டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு! - ராகுல்

ராகுல் டிராக்டர் பேரணி தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

rahul gandhi
rahul gandhi

By

Published : Jul 28, 2021, 1:14 PM IST

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 26) டிராக்டர் பேரணி நடத்தினார்.

அப்போது தாம் விவசாயிகளின் குரலாக ஒலிப்பதாகவும், ஒன்றிய அரசு சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணியை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். நாடகம் என்று கூறியதுடன் இது ஜனநாயக விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ராகுல் டிராக்டர் பேரணி- டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு!

இந்நிலையில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் டிராக்டர் சோனிபட் பகுதியிலிருந்து டெல்லிக்கு மறைமுகமாக கொண்டுவரப்பட்டதாகவும், இது சட்டவிரோதம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் சுரேந்திரா உள்பட சிலரிடம் காவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி!

ABOUT THE AUTHOR

...view details