டெல்லி: புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து டெல்லி போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் நிதிபெறும் பயங்கரவாதிகள், சுதந்திர தினத்தன்று ட்ரோன் தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்துள்ளன.
புலனாய்பு நிறுவனத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, ட்ரோன், ஏர் பலூன் உள்பட அனைத்து பறக்கும் பொருள்களுக்கும் தடை விதித்து டெல்லி காவல் ஆணையர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாது அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையரையும் தொடர் ரோந்து பணியில் ஈடுபடும்படி கூறியிருக்கிறார்.
புலனாய்வு நிறுவனங்கள் அளித்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதியும் டெல்லியில் தாக்குதல்கள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மிரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட நாள் அந்த வேளையில் வருகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புலனாய்வு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.