டெல்லி: இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படுவதற்கு நியூஸ்கிளிக் (NewsClick) சீனாவிடம் நிதி உதவி பெறுவதாக நியூயார்க் டைம்ஸ் (New York Times) தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று (அக்.3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி-க்கு தொடர்பு உள்ளதா என அவரது இல்லத்தில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
நியூஸ்கிளிக் (NewsClick) தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் ஆதாரங்கள் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் நியூஸ்கிளிக்ஸ் (NewsClick) பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது குறித்து பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சோதனை குறித்த முழு விபரத்தை விரைவில் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழப்பு!
நியூஸ்கிளிக்ஸ் (NewsClick) மீது முந்தைய வழக்குகள் விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நியூஸ்கிளிக்ஸ் (NewsClick) தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2021 ஆகஸ்ட் 22ஆம் தேதி மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிரபீர் புர்கயஸ்தாவை கைது செய்யக்கூடாது எனவும் மேலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நியூஸ்கிளிக்ஸ் (NewsClick) தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவு மீது IPC பிரிவுகள் 406, 402 மற்றும் 120-B ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் விசாரணையில் வெளிநாடுகளிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்தனர்.
PPK நியூஸ் கிளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் 2017-2018, 2018-2019, 2019-2020 நிதியாண்டுக்கான வருவாய் மற்றும் செலவுகளுக்கான ஆதாரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை மேலும் தலைமை ஆசிரியருக்கு எதிராக அமலாக்கத்துறையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க:பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரு ராணுவ வீரர்கள் காயம்!