தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீடு திரும்பிய பக்கா, 'பாஜக தொண்டர்கள் அஞ்சமாட்டார்' என சூளூரை! - பஞ்சாப் போலீஸரால் கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் பக்கா வீடு திரும்பினார்

டெல்லியில் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜக இளைஞரணி தலைவர் தஜிந்திர பல் சிங் பக்கா வீடு திரும்பினார்.

பஞ்சாப் போலீஸரால் கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் பக்கா வீடு திரும்பினார்!
பஞ்சாப் போலீஸரால் கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் பக்கா வீடு திரும்பினார்!

By

Published : May 7, 2022, 3:44 PM IST

டெல்லி: பஞ்சாப் போலீசாரால் நேற்று (மே6) அதிரடியாகக் கைது செய்யப்பட்ட பாஜக இளைஞரணி தலைவர் பக்கா டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குப் பாதுகாப்புடன் திரும்பினார்.

வீட்டிற்குச் சென்றதும் பக்கா டெல்லி மற்றும் ஹரியானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பாஜக உறுப்பினர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பஞ்சாப் போலீசாரால் பக்கா கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பக்காவின் தந்தை டெல்லி காவல்துறையிடம் பக்கா கடத்தப்பட்டதாகப் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த நிலையில், பக்காவை கைது செய்த பஞ்சாப் காவல் துறையினர் மொகாலி அருகே ஹரியானா காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஹரியானா காவல்துறையினர் பக்காவை குருஷேத்ரா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆம் ஆத்மி கட்சி ஆளும் மாநிலமான பஞ்சாப் மாநிலத்தின் கோரிக்கையை நிராகரித்த டெல்லி நீதிமன்றம் பக்காவை ஹரியானா காவல்துறை பாதுகாப்பில் வைக்க உத்தரவிட்டது.

மேலும் டெல்லி காவல் துறையினர் நீதிமன்றத்தின் வாரண்ட்டுடன் பக்காவை மீட்டு மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:பாஜக இளைஞரணித் தலைவர் பஞ்சாப் போலீஸாரால் கைது!

ABOUT THE AUTHOR

...view details